எனக்கென்று ஓர் உலகம்
நான்...
பல அவதாரம் எடுப்பதற்கு
கண்ணணும் அல்ல
பல
தாரங்கள் மணப்பதற்கு
மன்னனும் அல்ல
ஏதோ...!
சில சரித்திரம்
எனக்காக பிறக்காதா என்ற ஆசை
இரு
கண்கனை மூடி
கால்கள் ஏதுமில்லாமல்
கனவில் ஓடினேன்...!
அங்கே...!
பெயரே தெரியாத
பல மலைகள்
ஊகிக்க இயலாத
பல மரங்கள்
ஏதோ...!
நாளெட்டு தூரமென்று
எண்ணியிருந்தேன்
தூரம்
கடந்த பின்னே
தொலைதூர ஓருலகம்
அது
எனக்காக பிறந்த்து
அங்கே
இரண்டு கதிரவன்
மூன்று சந்திரன்
அவற்றில்
கிரகணங்கள் ஏதுமில்லை
அங்கே
பூக்களுக்கெல்லாம் விழிகளுண்டு
மரங்களெல்லாம்
பேசுவதுண்டு
அங்கு
மண்ணை மிதித்தால்கூட
மன்னிப்புக் கேக்கவேண்டும்
உண்மையில் அங்கே
உயிரற்ற உயிரினங்கள்
மனமற்ற
மனிதர்கள்தான்
இதயமென்ற ஒன்றிருந்தும்
அதில்
நான்கறைகள் எழுப்பி இருந்தும்
ஓர் அறையில்கூட
பாசத்தை
தூவ மறந்தவன்
கர்வம் நிறம்பிய
ஓர் அறை
சுயநலம் நிரம்பிய
ஓர் அறை
கொடுமை கொண்ட
ஓர் அறை
வாழத்தெரியா மனிதனுக்கு
வக்கற்ற ஓர் அறை
கௌரவம்
என்ற பெயரில்
ஈன்ற மக்களைக் கொன்று
ஈமக்கடன் செலுத்துபவன்
சாதி என்ற
சவக்குழியில்
வேள்வித் தீ எழுப்பி
ஆயிரம் தலைகளை
அதில் வெட்டி வீழ்த்துபவன்
மதமென்ற மதம்பிடித்து
தன்னின மனிதனின்
தலைமிதித்து
அங்கே...!
சாய்ந்துவிழும் உடல்களை
தன் சாதனை என்று
கூறுபவன்
அவனுக்கு
மிருகமென்று பெயர் கொடுத்தால்
பொருந்தாது
தீயினால்
சிறையடைத்தாலும்
திருந்தாது
ஐந்தறிவு ஜீவனெல்லாம்
பருவம் கொண்ட
அதனினத்தில் இனைகிறது
இவன்மட்டும்
பாலியல் குழந்தையைக்கூட
பலாத்காரம் செய்கிறான்
செங்கல்லில் சேலையிட்டால்
அதை
மங்கையென யினைத்து
மடிகிறான்
பொங்கும் கடலே...!
நீர்
பொங்குக
மங்கிப்போன மனிதமதி
மண்ணில் சாய்ந்து
விழவேண்டும்
கண்கள்
கலங்கித் தவிக்காதே
நீ அழுதால்
பூமி பொறுக்காதே...!
என்ன செய்யக் கூறுகிறாய்
நீ எழுந்துவா
எரியுமுன்னே
எந்தன் உலகம்
உன்னை ஏற்கும்
அதில்
உண்மை நேர்மை அரசாலும்
பாவம் செய்தால்
தலைபோகும்
ஓடிவா என்னுடனே
நீ ஓடிவா
என்னுடனே...!