கஜல் 2

கஜல் ஒரு ஃபார்சீ மொழி கவிதை வடிவம். ஃபார்சீ மொழியிலிருந்து உலகின் பல மொழிகளுக்கு பெயர்ந்து மிக பிரபலமாகி விட்டது. கஜல்.
தமிழில், காலம் சென்ற திரைப் பட பின்னணிப் பாடகர் உயர் திரு.பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் கலஜல்களை எழுதி வழங்கினார் என்பது எனக்குத் தெரியும். அவர் தான் என்னையும் தமிழிலில் கஜல்களை எழுதும்படி செய்தார்.
இதோ எனது கஜல்கள். பிடித்து விட்டு சொல்லுங்கள்.

-------------- உங்களோடு ரோச்சிஷ்மான்



நீ என் பார்வை பாடலில் பாவமாக வேண்டும்
நீ என் வார்த்தை மன்றிலே ஆடலாக வேண்டும்

ரத்தத்தை மொத்தமாய் சுத்தீகரிக்கிறாயே
நீ என் அன்பின் வானிலே நீலமாக வேண்டும்

ஆரா துன்பத்தணல் இன்றோடு ஆரவே வா
நீ என் ஆசை ஆற்றிலே வெள்ளமாக வேண்டும்

சித்தத்தை நித்த்தமும் தூயப்படுத்து கின்றாய்
நீ என் சிந்தைத் தோப்பிலே தென்றலாக வேண்டும்

நீங்காமல் நின்றிருக்கும் மின்னலென்று வந்தாய்
நீ என் வாழ்க்கைக் கோவிலில் தேய்வமாக வேண்டும்

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (14-Jul-15, 4:21 pm)
பார்வை : 62

மேலே