என் காதல் தேவதையே !

வங்கப் புயலே
கொங்கு தமிழே
சுங்கத்தில் தப்பி வந்த தங்கச் சிலையே ..

எங்கு உன்னை மறைத்து வைக்க ?
என் இதயம் தருவேன் நீ ஒழிந்து நிற்க ..

அங்கம் அங்கமாய் நான் எடுத்துச் சொல்லவா ?
பொங்குதடி என்னுள் கவியும் ,

எங்கு கொண்டெனை சேர்க்க போகிறாய்?
உன் பின்னால் தொடருதடி என் இதயம் ..

சங்கு கழுத்துக்கு சவரண் நகை எதற்கு ?
சலவை செய்தாட் போல் ஜொலிக்குதடி அதுவும்

உன் இதள் இரசம் ஒன்று போதும் , அதன் முன் தோற்று போகுமடி எந்த மதுவும் .

உன்னை அழகாக்க நீ போட்ட சவர்க்காரம் - அது
அழகாச்சு .

குளிருக்கு நீ போர்த்த ஜமுக்காளம் அந்த
வெண் நிலவாச்சு ..

உன் புன்னகை வைப்பு செய்தேன் பல பூக்கள் பரிசாய் பெற்றேன் ..

இன்று என்னையே உனக்கு தந்தேன் இந்த பிறவியில் மோட்சம் பெற்றேன் ..

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (21-May-11, 2:06 am)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 420

மேலே