நாளை என்றும் வருவதில்லை

..."" நாளை என்றும் வருவதில்லை ""...

பயணங்கள் தொடர்ந்திட
பாதைகள் நீண்டுவிட
நித்தமும் ஓட்டமாய்
அவசரமாய் அலையும்
இன்றையை மறந்தே
நாளையின் தேடலாய் !!!

காத்திருப்பு எதிர்பார்ப்பு
கனவாய் கானல்நீராய்
தொடர்ந்திடும் நிலையாய்
நம் விடியலின் துடக்கமது
விரைந்தே செல்லுகிறது
நாளையை நோக்கியே !!!

நாளை என்கின்ற நாளை
எட்டிப்பிடித்தவர் என்றே
புவியினில் எவருமில்லை
இருப்பினும் மனிதர்களோ
நில்லாமல் அந்த நாளையை
பிடித்திடவே நடக்கின்றார் !!!

நாளையன்ற ஒன்றிங்கு
இல்லையேல் நிச்சயமாய்
நம்பிக்கையும் இருக்காது
நாளையின் தேடலில் நாம்
நம்மையே தொலைத்தால்
நிம்மதியென்றும் இருக்காது !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (13-Aug-15, 12:17 pm)
பார்வை : 69

மேலே