நாய்கள் பலவகை

மற்ற விலங்குகளிலிருந்து
மாறுபட்டனவாக ..
நாய்கள்..
பல வகையினவாய்..

பெருங்குரலெடுத்து
போரிடும் சில..
கை ஓங்கிட ஓடிடும் ..

போவோர் வருவோர்
எவரையும் பொருட்டாக எண்ணாத
மோன நிலையோடு சில..

நன்றிக்கும் பாசத்திற்கும்
வாலாட்டி ஆட்டியே
வயதாகிப் போகும் சில..

வலியோனைக் கண்டிட
வாலினை இடுக்கிலடக்கி
பம்மும் சில ..

வெகுசாமர்த்தியமாய் ..
சாலையைக் கடக்கும் சில..

அவசரக் குடுக்கைகளாய் ஓடி
அடிபட்டு கிடக்கும் சில..

என்று அவைகளில் பலவகை..
ஏனெனில்..
மனிதனோடு நீண்ட நெடுங் காலமாய்
நட்போடு ..
இருந்துவருபவை..
அவை!

எழுதியவர் : கருணா (19-Aug-15, 2:38 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : naykal palavagai
பார்வை : 197

மேலே