காயங்களின் வழியே

காயங்களின் வழியே
தினம் தினம் பயணிப்பு !
கைப்பேசிக்குள் மனம்புதைத்த
கலியுக மாந்தர் பலர் !
நாளிதழில் நுனிப்புல் மேய்ந்து
நாட்டு நடப்புகளில் சிலர் !

நேற்றைய நிகழ்வுகளை
நினைவில்கொண்டு....
அசையா பொம்மைகளாய் சிலர் !
விரல் விட்டு எண்ணிவிடலாம்....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பேசிக்கொண்டிருப்போரை !

மீண்டும் காயங்களே
நிர்ணயிக்கின்றன...
சரியத்தொடங்கும்
நாடகமேடையிலிருந்து
இறங்குவதற்கான நடைமேடையை.... !
ஆம் இதுஒரு
மின்தொடர் வண்டிப் பயணம்...!

.........கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (25-Aug-15, 7:03 am)
பார்வை : 45

மேலே