அன்புள்ள காதலிக்கு

காலங்கள் கடக்கிறது
உன் நினைவுகள்தான் என்னை
இனிதே பயணிக்க வைக்கிறது....

என்றேனும் நீ
பேசும் வார்த்தைகளையும்
அதில் கலந்த பாசத்தையும்
இனிவரும் காலங்களும் நிரம்பி விடு ....

அருகருகே நாம் இருந்த காலங்களை
கண்ணருகே கொண்டு வந்து
நினைவுகளையும் கனவுகளையும் ஒன்று சேர்த்து
புது உலகில் உன்னோடு வாழ்கிறேன்
நீ அருகில் இல்லாத இந்த நாட்களில்....

யார் சொன்னது உன்னை
நான் பார்த்து நாளாகிவிட்டது என்று
உன் அசைவுகள் அனைத்தும்
எனக்கு அறிந்துதான் நடக்கிறது…

உன் புன்னகை
உன் வெட்கம்
உன் குறும்பு
உன் சோம்பல்
உன் அழுகை இப்படி பல பல
என்னில் ஒவ்வொரு நொடியும் தோன்றும் சிந்தனைகளில்
நீ இவ்வாறு ஏதேனும் செய்து கொண்டிருப்பதாய்தான் காட்டுகிறது....

காலை நேர தென்றலும்
மாலை நேர வெயிலும்
உன்னை துயிலெழுப்ப
துயிலுரங்க முயலும் போதும்
தோற்றுதான் போகிறது என் அனுமதி கிடைக்காமல்....

யார் சொன்னது நான்
தூரமாய் இருக்கிறோம் என்று
இந்த தூரம்தான்
நம் நெருக்கத்தையும் காட்டுகிறது....

என்னோடு தினமும் நீ
உறவாடி கொண்டுதான் இருக்கிறாய்
யாரேனும் பார்த்து விடுவார்களோ
என்ற அச்சம் இல்லாமல் என்னுள்....

நீ அருகில் இருந்தாலும்
இந்த சுகம் கிடைப்பது கடினம்…

நீ அருகில் இருந்தால் தினம்
ஆயிரம் முறை தூரமாய் நின்றுதான் பாக்க முடியும்
ஆனால் இப்போது என் கற்பனைக்கு ஏற்றவாறு
மடியிலும் மனதிலும் நினைவிலும் மாரி மாரி அமர்கிறாய்....

உன்னை நினைக்காத நொடிகளை
இதுவரை நான் சந்தித்ததில்லை
உன்னை காணும்போது இந்த நிலை மாறுமோ.?..

நான் பல நிமிடங்களை
தனிமையிலேயே கலிப்பதாய் இங்கே சொல்கிறார்கள்
அருகில் இருக்கும் நீயும் புன்னகைக்கிறாய்
உனக்கும் இதே நிலைதானோ....

உன் நிஜத்தோடு கலக்காத நிழல்
என் நினைவோடு கலந்ததால்
உன் நிழல் உருவத்தோடுதான்
என் நிஜ வாழ்க்கையை அதிகம் கலிகிறேன்...

உன் நிஜ உருவம் காணும் போது
நிழல் உருவத்தை இறக்கி வைப்பேன் உன் காலடியில்
அதுவரை தேடி கொண்டிருக்காதே உன் நிழலை....

என் கற்பனை குதிரைக்கு
கடிவாளம் இல்லை
உன் நினைகளை சுமந்து
உன்னை காணும் நிமிடங்களை தேடி ஓடுகிறது....

காத்திரு காதலியே
வந்து கொண்டிருக்கிறேன் உன்னை காண....

எழுதியவர் : பாலமுதன் ஆ (25-May-11, 11:10 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 847

மேலே