மருத தரும

ஸ்ரீபாம்பன் சுவாமிகள் திருவடிகளை வணங்கி இதனை எழுதுகிறேன்

ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அவர்தம் ஏகபாத அந்தாதி மாலை மாற்று ஒன்றைப்படித்தேன் அதன் அடிகளாவது

மருவ வரும இதன் பொருள் விளக்கம் புலவர் முனியமுத்து ஐயா அவர்கள் மடக்கணி ஆய்வில் விவரித்துள்ளார்கள்
அதன் படி எனக்கு தோன்றிய அடிகளையும் விளக்கத்தையும் எழுதியுள்ளேன்

மருத தரும
மருத தரும
மருத தரும
மருத தரும

மருத –மலையை உடையவனே
தரும-தருமா என்பதன் குறில் விளி
மருதாச்சலா என்பதை மருத என்க
அவன் மருத தரு-மருத மரக்காரன் அல்லவா
இதனை மருத தரு மமரு-என்பதனை அமருதா போர்புரிந்து அதாவது
தருமமருதா தறுமா என்று பொருள் கொள்க
அதாவது தரும அமரில் (அறு+ மா) =மா மரமாய் நின்ற சூரனை வென்றவனே
இதில் ரு வை வல்லினமாகவும் ம வை நெடிலாகவும் கொள்வது சிறப்பில்லை என்று கருதினால்
இப்படியும் பொருள் கொள்ளலாம்
இதில் தரும அமரு த தரும என்று பொருள் கொள்ள
அதாவது த எனபது பிரம்மனை குறிக்கும் த தரும என்பது பிரம்மனின் படைப்புத் தொழில்
பிரணவப்பொருள் மறந்த பிரம்மனை சிறையிலிட்ட முருகன் படைப்புத்தொழிலை தருமமாக செய்தானே
அதனை குறிக்கிறது

மருத –மணங்கமழ்பவனே ,
தரும்+அ- அ என்பது எட்டு என்பதை குறிக்குமல்லவா- அஷ்ட ஐஸ்வரியங்கள் நிறைசெல்வம் தருக எனவும் பொருள் கொண்டு எழுதினேன்

இந்த சித்திர கவிதைக்குள் இன்னும் பல சித்திர கவிதைகள் உள்ளன
அதாவது வருமாறு

1.இதில் ஒவ்வோர் அடியிலும் முன்னும் பின்ன்னும் வாசிக்க மாலை மாற்றாகவும் வரும்

2.பாவினை முழுமையாகவும் மாலை மாற்றாக காணலாம்
மேலும் இதையே சித்திர கவியில் இன்ன்னொரு கூறான கோமூத்திரி யாகவும் பார்க்கலாம்

3.இதே பாவில் அடி முடியும் எழுத்தினைக் கொண்டு அடுத்த அடி பாடப்பட்டதால் இது அந்தாதி மடக்காகும்

4.ஒரே அடியைக்கொண்டே முழுதும் பாடப்பட்டதால்

இது ஏக பாத அந்தாதியும் ஆகும்



5.இது ஒற்றெழுத்தில்லா பாட்டு
6. இது குறில் கொண்டே பாடப்பட்ட குறுஞ்சீர் வண்ணப்பாட்டு
7. இது மூன்றெழுத்து மடக்கும் ஆகும்
8. இது பிரணவப்பொருள் மறந்த பிரம்மனை சிறையிலிட்ட முருகன் படைப்புத்தொழிலை தருமமாக செய்தானே
அதனை குறிக்கிறது -இது காதைக்கரப்பும் ஆகும்

ஒரே சித்திர கவிகளுக்குள் பல சித்திரகவிகள் உள்ளதால்

இது விசித்திரகவியாகும்

எழுதியவர் : சு.அய்யப்பன் (2-Sep-15, 5:37 pm)
பார்வை : 81

மேலே