புத்தகங்கள்
நட்பு பகை
இளமை முதுமை
உயர்வு தாழ்வு
பேதமின்றி
நிரைப்படுத்தப்பட்ட
வரிசைகளில்
நிரந்தரமாக நிற்கும்
சமத்துவச் சாளரங்கள்
காலத் திறப்பு
கையகப் படுத்திய
பெட்டகத்துள்
களங்கமில்லா
உண்மைகள் புதைத்து
காத்துக் கிடக்கும்
அறிவுப் புதையல்கள்
உணர்ச்சியற்ற முதுகுத்
தண்டுடன் உள் வளைந்து
களையிழந்த முகத்துடன்
கனத்த பக்கங்களுக்கிடை
காலம் கடந்தும் சுவாசித்துக்
கொண்டிருக்கும்
வரலாற்றுப் பொக்கிசங்கள்.
கணனி உலகத்தால்
புறக்கணிக்கப்பட்டு
காகிதத் தொழிற்சாலைக்கு
நிரந்தர அமைதி தேடிப்
போகும் நாட்களை
எண்ணியபடி
காத்துக்கிடக்கும்
கணக்கில் எடுக்கப்படாத
இன்றைய குப்பைகள்.