நானும் மனிதன்தான்

கடல் வீடு கட்டி
உப்பு கடலில் கால் நனைக்க
கடல் மணலில் அலையோரம்
ஆடி மகிழும் என்னை
கரையோரம் ஒதுங்க வைதாயடா!!!
பாவி நானும் உன் வீட்டு குழந்தையடா..........
விவரம் அறியா வயதடா.........

படகில் நான் அன்னை மடியில்
விளையாடி பயணித்தேன் - காலம்
அன்னையுடனே
முடிந்தது என் பயணம்........

இரகமற்ற உலகம்
முள் படுக்கை விரித்து
வரவேற்கும்
அகதியான என் உறவை
மனிதம் மதங்களை சார்ந்தது
உண்மைதான்
வீதிக்கு வந்ததும் அகதியாய்............

மனிதா!!!!!
உன் போல்
உருவம்தான் எனக்கும்
உன் மொழிதான் என் மொழியும்
உன் போல் சிகப்பு குருதி
என்னுளும்- கொடுமைகாரா
ஏனடா இந்த வெறுப்பு.........

நானும் மனிதன் தான்
மனிதனை மனிதனாய் மதிக்காத
இந்த பூமியிலே!!!!!!
நானும் மனிதன் தான்.......

உன் போல் மனிதம் மதிக்கா
மதம் மதிக்கும் மனிதன்
இருக்கும் வரை
என் போன்ற சமூகம்
அழுது புலம்பத்தான் செய்யும்........

வாழ விடு
இல்லை
நீ மாண்டு விடு........
எங்களை வாட்டாதே........

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (7-Sep-15, 7:48 pm)
பார்வை : 107

மேலே