மயக்கம்

அதோ பார் பெண்ணே....

பூக்களில் வண்டுகள்

மயங்கி உறங்குகின்றன.

தேனை உண்டதாலா,

தென்றலின் பாட்டை

கேட்டதாலா,

பூவின் வாசனையாலா

பூவின் மேல் கொண்ட

காதலாலா,

பூவை பாரடி பூவையே

நான் மட்டும் துன்பத்தில்

விழித்தே இருக்கிறேன்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (7-Sep-15, 7:26 pm)
Tanglish : mayakkam
பார்வை : 79

மேலே