வெற்றியை தேடி பாதை-2

வெற்றியை அடையும் வழியைக் கூறு என்று
கடவுளிடம் கேட்டேன் – என் கண்
கட்டப்பட்டு குருடனாகிவிட்டேன் பாதை தெரியாது என்றார்
அறிஞரை அணுகினேன் – உன்
அறிவாற்றலை உலகிற்கு காட்டு உயர்வாய் என்றார்
செல்வந்தனிடம் சென்றேன் – செலவுகள்
செம்மையாக இருக்கும் செலவிடுவாயா? என்றார்
ஆனால்
ஏழ்மை என்னை ஏமாற்றியது – ஏங்கினேன்
புத்தன் பார்த்து புலம்பாதே – நீ
புத்துணர்ச்சியோடு புறப்படு என்றார்
விவசாயியிடம் விரைந்தேன் – உழைப்பின்
விளிம்பை விளக்கி வெற்றி அடையச் செய்தார்
சன்றோரைச் சந்தித்து சந்தோஷப்பட்டேன்
சாதித்து விட்டாயே என்றார்
நண்பனிடம் நடந்ததைக் கூறினேன் – நான்
உன்னை பின்பற்றுகிறேன் என்றான்
-கவிசதிஷ் செல்-9965909897

எழுதியவர் : கவிசதிஷ் (11-Sep-15, 8:54 am)
சேர்த்தது : சதிஷ்குமார்
பார்வை : 119

மேலே