ஆள்வது நாம்
வாழ்வது நமக்கல்ல
பிறருக்காக
வாழ்வதின் அர்த்தம்
ஏராளம்
ஒருவரை நம்பி
ஒருவர்
அதுதான் மனிதனின்
வாழ்க்கை,
தனி மரம் தோப்பாகாது
உண்மை
ஒருவராக வாழ்ந்தால்
துறவுகளே
உறவுகள் சேர்ந்தால்
உலகம்
பாழும் உலகம் அல்ல இது
வாழும் உலகம்
வாழும் மனிதன்ஆளும்
கோட்டை
ஒவ்வொரு மனிதனும்
மன்னர்களே
மன்னர்கள் ஆள்வது
தேசமே
வீடும் குடிசையும்
அரண்மனை
இறைவன் படைத்த
உலகம்
மனிதன் ஆண்டிட
வேண்டும்
,
இந்த வாழ்க்கை
நமதல்ல
நினைந்து வாழ
வேண்டும்
வாழ்ந்து பார் எங்கும்
மன்னர்
மக்கள் ஆளும் பூமி
மக்களாட்சி
ஆளும் அழகை
ரசிக்க
இறைவன் வேண்டும்
இங்கே ,