காதல்

நான் நலமாய் இருப்பதற்காக
பிரிவதாய் நீ கூறிய
அந்த கடைசி உரையாடலில்
அழுதுவிட கூடாதென
கல்லாகி இறுகி இருந்தேன்

"சப்பமூக்கி கடைசியா ஏதாச்சும் சொல்லுடி"
என நீ கெஞ்சிய நொடியில்
என் அணை உடைந்து கண்ணீர் பெருக்கு
நான் கதறிய ஒலி
காற்று மண்டலம் தாண்டி இருக்கும்

பிரிந்ததாய் அறிவித்த அந்நாளில்
இருந்துதான் நிமிடம்தோறும்
இரட்டிப்பாகி, நினைவுகளை தின்று
பிரம்மாண்டமாகி இருக்கிறது காதல்
காதலில் நாம் தோற்றோமா?

எழுதியவர் : மேரி டயானா (23-Sep-15, 5:01 pm)
சேர்த்தது : மேரி டயானா
Tanglish : kaadhal
பார்வை : 170

மேலே