சுதந்திர தேசம்

சுத்தம் சோறுபோடும்

சுத்தம் சோறு போட்டது போதும்
நித்தம் குளிக்க தண்ணீர் விடுங்கள்!

கூழானாலும் குளித்துக்குடி

நாங்கள் குளித்தது போதும்
குடிக்கவாவது கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்!

கந்தையானாலும் கசக்கி கட்டு

அது சரி....,

கசக்கும் வரை
எதைக்கட்டுவதாம்?

எழுதியவர் : வெ. பசுபதி ரெங்கன் (29-May-11, 4:58 pm)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 329

மேலே