புது கிரகம் பாேவாேம்

அக்கிரக வயல்களில்
நெல்விதைகளுக்கு
பதிலாக
நேசம் விதைக்கபடுகிறது

அங்குள்ள செடிகளில்
பூக்கும் பூக்களேல்லாம்
யுகங்கள் தாண்டியும்
உதிர்வதில்லை

ஒருவேளை ஏதேனும்
ஒரு பூ உதிர்ந்துவிட்டால்
மலர்களுக்காக
மாநாடு நடத்தி
இனி உதிராமல் காக்க
உறுதிமொழி எடுக்கின்றனர்

அங்கு மலர்களை
மிதிப்பவர்களுக்கு
மரணதண்டனை
விதிக்கபடுகிறது

அரசியல் தலைவர்கள்
ஒரு ஓட்டுக்கு
ஆதரவற்ற ஒரு குழந்தையை
அன்புடன் வளர்க்க
கொடுக்கின்றனர்

அக்கிரகத்தில்
தீவிரவாதமும்
இராணுவமும் இல்லை
காரணம்
அங்கு நாடுகள்
பிரிக்கபடவும் இல்லை
பறிக்கபடவும் இல்லை

அக்கிரகத்தின்
பிரதான சின்னம்
கர்பிணிகள்
காரணம்
தெய்வங்களை சுமப்பதால்

பூலோகத்தில்
அடியோடு
அறுக்க படயிருக்கும்
மனிதநேயம்
வேற்று கிரகவாசிகளிடம்
வேர்விட்டு விட்டது

இனி இக்கிரகம் வேண்டாம்
அன்பு அறுவடையாகும்
அக்கிரகத்தில்
அடைக்கலமாவோம்

எழுதியவர் : வேலு வேலு (25-Sep-15, 1:53 am)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
பார்வை : 65

மேலே