வாழ்ந்து பார்

வாழ்ந்து பார்
====================================================ருத்ரா

வாழ்க்கையை
வாழ்ந்து பார் என்று
புத்தகம் போட்டான்.
புத்தகம் வசூலை வாரிக்குவித்தது.
பாங்க பாலன்சும் ஏறியது
இப்போது
அவன் ஒரு சாமியாரைப் பார்க்க போனான்
வாழ்க்கை
என்னை வைத்து
வாழ்ந்து விட்டு போய்விட்டது.
நான் வாழ்க்கையை எப்படி
வாழ்ந்து பார்ப்பது?
சாமியார் சொன்னார்.
உன் பணத்துக்கு வருமான வரி கட்டினாயா?
அவன் துணுக்குற்றான்.
அவன் வாழ்க்கை
அவன் வாசல் கதவை இப்போது
பலமாக தட்டத்தொடங்கியது.
வீட்டு வாசலில் அசோக சக்கரத்து முத்திரையுடன்
நாலைந்து கார்கள்.

========================================================

எழுதியவர் : ருத்ரா (27-Sep-15, 11:22 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : vaalnthu paar
பார்வை : 92

மேலே