அவன் மௌனம்

முதல் முறை....
இத்தனை நீண்ட மௌனம் - என்
முகம் பார்க்க முடியாத மௌனம்...

உன் விழிகளுக்கு எனை பார்க்க மட்டுந்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன்...
தரை கூட பார்க்க தெரிகிறதே!

எனை பார்க்க முடியாமல் ஏன் தவிக்கிறாய்... தரையில் அமர்ந்தேன் தலை மறைவாய்...

விடை கூற மட்டும் வார்த்தைகள் வருமா? என் விழி அசைவுக்கு காத்திராமல்....

எதிர் பார்த்தது மட்டும் தான் என் தவறென்றால்... ஏங்கி தவிக்கிறேன் விடுங்கள்.....

மன்னிப்பு கேட்டு பழக்கமில்லை எனக்கு....
மரணத்தை கேட்கிறேன்.....

எழுதியவர் : (28-Sep-15, 4:53 pm)
சேர்த்தது : சங்கீதா வ
Tanglish : avan mounam
பார்வை : 70

மேலே