ஏற்ற தாழ்வு

பொழுதுபோக்கு அவசியம் தான்...அதை விட முக்கியம் சாப்பிட உணவு......

சற்று முன் நான் இணையதளத்தில் பார்த்த செய்தி ஒன்று என் மனதில் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது. பாகுபலி இயக்குனர் ராஜமெளலி 1000 கோடி ரூபாய் செலவில் மகாபாரதம் திரைப்படம் எடுக்க போகிறராம்.பிரம்மாண்டம் பொழுதுபோக்கு,நல்ல திரைப்படம்,இந்திய சினிமாவை வேற நிலைக்கு எடுத்து செல்வது.

இதை எல்லாம் தாண்டி கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள்.நம் நாட்டில் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் நிறைய பேர் இருக்கிறார்கள்.500 ரூபாய் வட்டி காசு கட்ட இயலாமல் 1000 கணக்கில் விவசாயிகள் தினமு‌ம் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்..

அப்படி இருக்க இந்த 1000 கோடி ரூபாய் எங்கே இருந்து வந்தது.இது யாருடைய பணம்...1000 கோடி ரூபாய் செலவில் ஒரு திரைப்படம் தயாரிக்கபடுகிறது என்றால்.அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்..அந்த படத்தை வாங்கி விற்கும் விநோயகிஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்..அதை திரையில் ஓட வைக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்...

அடுத்து உங்கள் மனதில் என்ன கேள்வி எழும் என்றும் எனக்கு தெரியும் எல்லா திரைப்படங்களும் வெற்றி பெறுவது இல்லையே...உண்மைதான்,ஆனால் படம் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளரோ,இயக்குநரோ,திரையரங்கு உரிமையாளரோ..அந்த படத்தில் நடித்த கதாநாயகனோ தற்கொலை செய்து கொண்டதாக நான் கேள்விப்பட்டது இல்லையே..

ஏன் என்றால் அவர்களை பொறு‌த்தவரை அது வெறும் ஒரு தொ‌ழி‌ல் ஒரு படம் தோல்வி அடைந்ததால் அடுத்த படத்தில் சம்பாதித்து விடலாம்....

ஆனால் ஒரு விவசாயி தன்னால் எப்பொழுது விவசாயம் பண்ண முடியவில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றானோ அன்றுடன் இந்த உலகில் வாழ தான் தகுதி இல்லாதவன் என்று தன்னை மாய்த்துக் கொள்கிறான்..ஏன் என்றால் விவசாயம் அவன் தொழில் அல்ல அது அவனுடைய உயிர்....தன்னால் ஒரு மனிதனின் உணவின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற உண்ணதமான உணர்வு...

ஆனால் நாம் என்ன செய்வோம் விவசாயி தன் வியர்வையை சிந்தி,அவன் கோமாதா ரத்தத்தை முறித்து தரும் பாலை நமக்காக எந்த விதத்திலும் பயன்படாத கதாநாயகனின் 60 அடி கட் அவுட் மேல் நின்று கீழே வீணாக ஊற்றுவோம்..

அடுத்ததாக உங்கள் கேள்வி இதுவாகத்தான் இருக்கும் திரைப்படத்துறையிலும் நிறைய பேரின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கு என்று..என்னுடைய கேள்வி இதுதான் சொகுசு கார்,சொகுசு பங்களா என்று வாழும் நடிகரின் சம்பளம் எவ்வளவு..அந்த திரைப்படத்திற்காக நாள் முழுவதும் வெயிலில் வேலை பார்க்கும் அடிமட்ட தொழிலாளியின் சம்பளம் எவ்வளவு...ஏன் இந்த இருவருக்கும் இடையே இவ்வளவு ஏற்ற தாழ்வு...

ஒருபக்கம் நம் பொழுதுபோக்கு காக பயண்படும் சினிமா எடுக்க கோடி கணக்கில் பணம்.மறுபக்கம் நாம் தினமும் உண்ணும் உணவை தயாரிக்கும் விவசாயி பணம் இல்லாமல் தற்கொலை...

நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் சற்று சிந்தித்து பாருங்கள் நண்பர்களே.......

200 ரூபாய் செலவு செய்து சினிமா பார்க்கும் நாம் தான்...வெட்கமே இல்லாமல் காய்கறி கடைகாரனிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசுகின்றோம்...இதனால் பாதிக்க படுவது யாருடைய வாழ்வாதாரம்....

இந்த பதிவு சிலரை காயப்படுத்தி இருக்கலாம்...சிலரின் பார்வைக்கு தேவை இல்லாத பதிவாக இருக்கலாம்....

ஆனால் என்னை பொறு‌த்தவரை நான் தினமும் உண்ணும் உணவில் ஒரு விவசாயின் உழைப்பு இருக்கிறது..என்னால் அந்த மனிதனுக்கு 60 அடியில் கட் அவுட் வைக்க முடியாது...மாறாக அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இந்த பதிவினை பதிவிடுகிறேன்....

இது பலரின் பார்வைக்கு கொண்டு செல்வது உங்கள் கையில் தான் உள்ளது......

எழுதியவர் : படித்தது பகிர்ந்தது : முக (8-Oct-15, 7:06 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : yetra thaalvu
பார்வை : 458

மேலே