வசப்படுவாள் நிலவும்
மீன்களோ துள்ளியோடும் மீனவர் கோயில் .
அலைகளோ மோதுகின்ற அழகியக் கடல் .
மழலையோ எட்டிபிடிக்கும் முழுமதியாம் நிலவு .
செவ்வானமோ சிரித்திடும் வான்மகளின் விந்தை .
எட்டிவிடும் குழந்தாய்..! வாட்டமது வேண்டாம் .
வசப்படுவாள் நிலவும் .. நம்பிக்கையின் பலத்தால் .
உன்கையில் முழுமதியும் உட்கார்ந்து கதைபேசும் .