மான் விழியாள்

மான் விழியாள் என வர்ணித்த என் முன்னோர் உன் கண்களை கண்டால் அதிக மையின் உள்ளே கண்களை தேடியிருப்பர்!
காம்புடன் கூடிய அனிச்ச பூ தாங்கா இடை என்று கூறிய வள்ளுவர் சரக்கு ஏற்றிய கப்பலை கூட ஏற்றி இருப்பார் உன் இடையில்!
பிரிவினால் பசலை படருகிறது என்றவன் உன் ஒப்பனைக்குள் எங்கே பசலை நிறத்தை தேடுவான் ?
இருந்தாலும் நான் உன்னை நினைத்து எழுதும் கவிதைகள் அழகாய் இருப்பதென்ன?
ஒரு வேளை கவிதைக்கு அழகு பொய்கள் என்பதாலோ ?

எழுதியவர் : பாண்டி (12-Oct-15, 7:33 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 125

மேலே