பராசக்தி
ஆற்றலை கொண்டவளாம் - பராசக்தி
ஆயுதம் கொண்டவளாம்
போரினில் வென்றவளாம் - பராசக்தி
பாரினில் நின்றவளாம்
சூரனை கொன்றவளாம் - பராசக்தி
வீரத்தை கொண்டவளாம்
மகத்துவம் செய்தவளாம் - பராசக்தி
ஜகத்தினை செய்தவளாம்
சாத்திரம் சொல்லுகிறார் புதுப்புது
சூத்திரம் சொல்லுகிறார்
தோரணம் கட்டுகிறார் புதுப்புது
காரணம் கட்டுகிறார்
போற்றி புகழுகிறார் சூலம்
ஏற்றி தவழுகிறார்
பாட்டி கதையினையே இவரும்
கூட்டி புலம்புகிறார்
காரணம் சொல்லட்டுமா பராசக்தி
காரியம் சொல்லட்டுமா
மனதீமையை கொன்றிடவே நல்ல
ஆயுதம் செய்யட்டுமா
ஆசை மகிஷியை கொன்றிடவே
ஞான ஆயுதம் கண்டிடவே
உலக பற்றினை விட்டிடவே
உன்னை பற்றி நீ கற்றிடவே
ஆயுதம் செய்திடுவாய்
ஞான ஆயுதம் செய்திடுவாய்