நீ மௌனம் உடைத்திருந்தால் என் இதயம் தாங்கி இருக்கும் 555

என்னவளே...

ஒருமுறை சந்தித்தோம் மீண்டும்
சந்திப்போமா என்று நினைக்கையில்...

எதார்த்தமாக மீண்டும்
சந்தித்தோம்...

பார்த்துகொண்டது விழிகள்
அடித்துகொண்டது இமைகள்...

மோதிகொண்டது மூச்சுகாற்று
இடமாறிகொண்டது இதயம்...

இனிமையான ஓர்
காதல் பயணம்...

உன்னிடம் காதலனாக
இல்லாமல்...

கணவனாக சில அன்பு
கட்டளைகள் நான் இட...

நீ என்னிடம் மறுத்திருக்கலாம்
முடியாது என்று...

மௌனங்களை தந்துவிட்டு
என்னை பிரிந்து சென்றதேனடி நீ...

நீ இதழ்திறந்து பேசிருந்தால்
என்இதயம் தாங்கி இருக்கும்...

மௌனத்தால் என்னை
கொன்றுவிட்டு சென்றாயடி...

மீண்டும் என்னைவந்து சேர்வாய்
என்ற நம்பிக்கையில்...

அதே காதலுடன் நான்
காத்திருப்பெனடி நான் எப்போதும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Oct-15, 4:04 pm)
பார்வை : 761

மேலே