என் காதல்

அவனும் அவளும் ஓடி போக துரத்தி செல்கிறது ஒரு கூட்டம்...... அவர்களிடம் மாட்டாமல் ஓடுகின்றனர் இருவரும்..... ஓட்டம் ஓட பின் வருவோரின் துரத்தலும் அதிகரிக்க வேகம் பிடிக்கிறது அவர்கள் ஓட்டம்......

முன் கதையில்.......

அவள் பெயர் வசந்தி, தேவதையின் மறு உருவமாய் இருப்பவள், அவளின் வீட்டில் அவளுக்கு பாசத்திற்கு குறைவில்லை. அவள் அப்பா பெரிய அரசியல் தலைவர், அவளின் வீட்டு திண்ணைதான் பஞ்சாயத்து அந்த ஊரில் பலருக்கு, அதனால் எதிரிகள் அதிகம்...

என் பெயர் கதிர், நான் அவர்கள் வீட்டில் சகஜமாய் நடமாடுவேன், ஏனென்றால் அவளின் அண்ணன் என் ஆருயிர் தோழன் அதனால் எனக்கு இந்த மரியாதைகள். இருந்தும் அவள் வீட்டில் எல்லோருக்கும் என் மேல் ஒரு தனி கரிசனம்தான், என் பழகும் தன்மை பிடித்தால்.....

ஒருநாள் உதிர்த்தது அந்த கவிதை கிறுக்கல்கள், காரணம் காதலிக்க தொடங்கிவிட்டேன்.....
அன்று விடிந்த சூரியன்
பகல் ஒளியை தரவில்லை
நிலவொளியை தந்தது போல்
உள் மயக்கம்.....

அன்று என் கண்களுக்கு வசந்தி மட்டும் தான் தெரிந்தால், அவள் எனை அன்று ஈர்த்துவிட்டாள்... என் உள் மனம் கூறியது இது காதல் என்று,.......

அவளுக்கும் இந்த உணர்வு தோன்றியது போன்று இருந்தது அன்று அவளின் செய்கை..... இவ்வாறு நகர்ந்து நாட்கள்.....

இன்று,
வசந்தியின் அப்பாவுக்கு வந்தது மிரட்டல் , உன் பொன்னின் திருமணம் எவ்வாறு நடக்கிறது பார் என்று,....... என் செய்வது அறியாமல் அவள் அப்பா

நான் அவளை கை விடாமல் இழுத்து ஓடி கொண்டிருக்கிறேன். பின் துரத்தும் கூட்டம், ஓடி ஓடி ஒய்ந்த கால்கள் ஒரு கோயிலில் நின்றது...... அங்கு திருமண ஏற்பாடுகள் நடந்தேறின, நான் அவளின் கைகளை பிடித்த படி அய்யரின் முன் சென்றேன், அவர் கெட்டி மேளம் முழங்க தாலியை எடுத்து வசந்திக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையிடம் கொடுத்தார்.... அவன் அவளின் கழுத்தில் கெட்டினான். வசந்தியின் அப்பா கண்ணில் நீர் ததும்ப நன்றி கூறினார்.... அவளை பத்திரமாக கொண்டு வந்ததற்கு,

என் காதல் மறந்து போனது என் நண்பனின் பாசத்திற்கு முன்னால்....
அவளின் மனதிலும் என் காதல் தெரிந்ததோ?? தெரியாமல் என் சொல்ல படா காதல் நண்பனின் பாசத்தில்...........

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (3-Nov-15, 10:02 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : en kaadhal
பார்வை : 327

மேலே