கவியரசி ==== கயல் விழி

கருத்து மிகு
கவி புனைந்து
காந்தமாய்
காண்பவர்கள்
கவனம் ஈர்த்து
கயல் போன்று
களைப்பில்லாமல்
கவிதை எனும் விழிகளால்
காண்பவர்கள் உள்ளம் கவர்ந்து

கலக்கலாய்
காதல் கவிதைகளையும்
களங்கமில்லாமல் படைக்கும்
கயல் விழி .....

குற்றால அருவி போல்
உன் கவிதைகள்
கொட்டுவதின்
ரகசியம் அறியலாமா ???

கயல் விழி எனும்
பெயர் சூடியதினால் தானோ நீ
துடிதுடிப்புடன்
துடிப்பாய்
பத்திரிக்கையின்
ஆசிரியராய்
தமிழை ஆளுகின்றாய் ....

ஆணவமின்றி
அடக்கமாய்
அம்சமாய்
அனைத்து
அதிகாரத்திலும்
அம்பாய் கருத்துகளை
அள்ளி வீசும் உனக்கு
ஆண்டவனின் அருள் என்றென்றும் ....


உன் சிறப்பு அம்சங்கள்

க வி க்கு நீ அரசி
யதார்த்தமான நடை இய
ல்பாய் பழகும் தன்மை
வித்தியாசமான பார்வை எ
ழில் மிகு சுறுசுறுப்பு

மேலும் மேலும் வளர, உயர, மிளிர
வெற்றியின் உச்சத்தை தொட ,
ஆண்டவனின் அருளை பெற
வாழ்த்துக்கள் !!!!!!

Keep rocking

==கிருபா கணேஷ் ====

எழுதியவர் : கிருபா கணேஷ் (7-Nov-15, 11:21 pm)
பார்வை : 291

மேலே