மீண்டும் மீண்டும் நண்பர்கள் வேண்டும்

அது ஒரு மழைக்காலம்
அன்று
நாலடியில் நண்பர்களோடு
கட்டிய ஓலை வீட்டிற்குள்
இருந்த மகிழ்ச்சி கிடைக்குமோ
இன்று
நாற்பதடியில் கட்டிய
சோலை வீட்டிற்குள் ...

ஆலை சங்கு ஊதும் வேளையிலே
ஓலை கொங்கு காட்டு மேட்டினிலே
நுங்கு வெட்டி சாப்பிடுவோம்
காட்டு மேடெல்லாம் இப்போ
பூட்டு வீடாச்சி இனி
எங்கு வெட்டி சாப்பிடுவோம்
அந்த சுகத்தை ..

அன்று
கூட்டான் சோறோடு
சர்க்கரையாய்
இனித்தது பனஞ்சோறு
இன்று சர்க்கரையை
உடலில் திணிக்கிறது
மட்டன் தினச்சோறு
எனும் பணச்சோறு

அன்று
பள்ளித்தரையில்
துள்ளிவிளையாடிய
சொல்லித் தீரா எட்டிய இன்பம்
இன்று
பளிங்குத்தரையில் கிட்டுவதில்லை

அன்று சொர்க்கத்தில்
மிதந்திருக்கேன்
ஆலமர ஊஞ்சல்கட்டி
இன்று சோகத்தில்
மிதக்கின்றேன்
அந்தக்காலமர ஞாபகத்தை
ஊஞ்சல்கட்டி

அந்தி சாயும் வேளையில
அடுத்தவங்க கொல்லியில
அடுக்கு மரவள்ளிகள
அடிச்சோம் நாங்க கொள்ளைகள
அந்த சுகம் எல்லையில்ல

மாட்டு வண்டி பயனத்த
வீட்டு வண்டி கொடுக்கலையே
நாடு பிடிக்கும் ஆட்டத்தை
இந்த வீடு பிடிக்கும் ஆட்டம்
கொடுக்கலையே

பனம்பழம் சுட்டு தின்போம்
பனங்கிழங்க பிட்டு தின்போம்
நன் பணம் கொடுத்த சாமியே
அந்த நண்பன் எங்கே காமியே..!

எழுதியவர் : குமார் (7-Nov-15, 9:43 pm)
பார்வை : 698

மேலே