தாவணித் தோட்டம்

சேலை உடுத்தி வந்தால்
அவள் சோலை
சோலையில் பூக்கும்
புன்னகைப் பூக்கள்
சுடிதார் அணிந்து வந்தால்
அவள் சுடர்க்கொடி
சுடர்க் கொடியில் பூப்பதும்
புன்னகைப் பூக்களே !
சல்வார் கமீஸ்ஸில் அவள்
சாயந்திர ரோஜா
தாவணி அணிந்து வந்தாலோ
அவள் நடக்கும் மல்லிகைத் தோட்டம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Nov-15, 3:07 pm)
பார்வை : 73

மேலே