நான் யார்
நானா? இது நானா? கேள்விகள் கேட்கிறேன்...
கண்ணாடி உன்னை பார்த்து...
பிறரின் முகம் காட்டும் உனக்கோ முகமில்லை
பலர் உன்னிள் தன்னை பார்த்தும்
உனகோர் முகமில்லை
உன்னை பார்ப்போர் இல்லை...
பிரதிபளிப்பு என்ற வார்த்தையும் உன்னிலிருந்து பெறப்பட்டது - நீயோ
தன்னடக்கமாய் தவமிருகிறாய்...
காரணம் மறந்தார் பலர்...
கருத்தை மதியார் பலர்...
மாற்றங்கள் மாறினாலும் நீ மட்டும்
மாறாமல் உன்நிலையில் நிற்கிறாய்...
பொருளாக இருந்தாலும்
பலநூறாக உடைந்தாலும்
உன்குணம் மாறியதில்லை
என்னைப்போல்...
உன்னைப்போல் பொறுமை கண்டதில்லை
உன்னைப்போல் வாழ்ந்திட ஆசையில்லை
இருந்தாலும் உன்னகாக தலை
வணங்குகிறேன் நான்...