கண் நோய் மருத்துவம்

கண் மருத்துவரிடம் இளைஞன்
கண்ணிலே நோய் என்றான்
என்ன நோய் என்றார் மருத்துவர்
காதல் நோய்
விழிச் சொட்டுக்கள் இருக்கிறதா
என்றான் கிண்டலாக
இருக்கிறது ஆனால் என்னிடம் இல்லை
உன்னிடம்தான் என்றார்

காதலில் வெற்றி பெற்றால்
ஆனந்த கண்ணீர் சொட்டு
தோல்வியுற்றால்
துயரின் கண்ணீர் சொட்டுக்கள்....

இளைஞன் வாயடைத்து நின்றான் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (26-Nov-15, 10:08 pm)
பார்வை : 229

மேலே