ஏன் இப்படி ஆனேன்
முழுநிலவே உனைக்கண்டு தேயும்
கதிரவன் ஆனேன்
காதலழுத்தம் தாளாமல் பொறுமையிழந்த
பூமி ஆனேன்
காலை மலரும் மல்லி
மொட்டாய் ஆனேன்
மாலை சிரிக்கும் சொம்பருத்தி
இதழ் ஆனேன்
மௌனம் உடைக்காத உன்
நிழல் ஆனேன்
பாலை பொழிந்த பருவ
மழை ஆனேன்
அலை நுரை அற்ற
ஆழி ஆனேன்
மென்மை இலக்கண வன்மை
பாறை ஆனேன்
தட்டக் கொட்ட ஒலியற்ற
இசை ஆனேன்
ஊசிமுனையில் உலகை ஏந்தும்
அறிவிலி ஆனேன்
உண்மை பேசி பொய்
விளக்கம் ஆனேன்
ஊண் உருகி உயிருள்ள
ஜடம் ஆனேன்
காதல் நிரப்பி குறை
குடம் ஆனேன்.