முரண்பாடு

அனைத்து துறைகளிலும் நாங்கள்,
ஆணுக்கு சலித்தவர்கள் அல்ல
நாங்கள் ஆண்களை சார்ந்து அல்ல,
ஆண்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை,
என பேசும் பெண்கள்,
பல நேரங்கள்
ஆண்களின் உதவியை நாடியே
செயல்படுவது ஏன்?

விவாகம் இருவருக்கும் பொதுவாகும் போது
ஆண், பெண் சரிசமம் என்று பேசும் போது,
விவாகரத்தாகும்போது மட்டும்,
ஜீவனாமிசம் போதாது என்று,
வழக்கு தொடர்வதெல்லாம்
நாங்கள் ஆண்களை நம்பித்தான்
இருக்கிறோம், சார்ந்திருக்கிறோம்,
சொந்தக்காலில் நிற்க முடியாது
என்பது உறுதியாகிறதே!

சேர்ந்து வாழ்ந்து
பிரியும் போது,
எந்த ஆணும் மனைவியிடம்
ஜீவனாமிசம் கேட்பதில்லையே!
கேட்டாலும் கிடைப்பதில்லையே!
எத்தனை வாய்ப்பேச்சு பேசினாலும்
ஒரு சமயத்தில்,
நாங்கள் ஆண்களை சார்ந்து
தான் வாழ்கிறோம்
என்பது போல் செயல்படுவது
முரண்பாடல்லவோ!

எழுதியவர் : அர்ஜுனன் (18-Dec-15, 3:50 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 146

மேலே