kavithai

பொய்
ரசிக்கப்படும்!
மெய்
சிலிர்க்கபடும்!
உள்ளம்
இனிக்கும்!
உணர்வுகள்
தூண்டபடும்!
உயிர்
உலகின் உச்சிக்கு
செல்லும்!
மனம்
பூ பந்தாகும்!
காலையும்
மாலையும்
ரசிக்கப்படும்!
சூரியனும்
சந்திரனும்
சேர்க்கப்படும்!
மானும் மயிலும்
உவமையாகும்!
கண்ணும் மீனாகும்!
கார் கூந்தலும்
கார் மேகமாகும்!
மழையும் அருவியும்
தமிழ் பேசும்!
கடலும் கரையும்
பேசிக்கொள்ளும்!
ஓயாத அலையும்
ஓய்ந்து போகும்!
வானவில்லும் நடமாடும்!
வான் முகிழும் சாய்ந்து ஆடும்!
புல்வெளியும் பூக்களும்
புல்லாங்குழல் ஊதும்!
இதயமும் இதயமும்
இணையும்!
கல்நெஞ்சும் ஈரமாகும்!
கனபொழுதில் நினைவுகள்
நிஜமாகும்!
கனவும் கற்பனையும்
வார்த்தையாகும்!
இன்னும் சொல்ல சொல்ல
எழுத எழுத
நானே நானா
என்று வியக்க தோன்றும் .......
தமிழுக்கு பெருமையே
என் கவிதை!!!!!

எழுதியவர் : udaya (24-Dec-15, 5:58 pm)
பார்வை : 93

மேலே