படித்ததில் பிடித்த செய்தி - இந்தியா -பாகிஸ்தான் நல்லுறவு
மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம்: அமெரிக்க ஊடகங்கள் புகழாரம்
வாஷிங்டன்,
பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
வால் ஸ்டீரீட் ஜர்னல்
அணு ஆயுத வல்லமை கொண்ட இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான சமரச முயற்சிக்கு கூடுதல் வலு சேர்க்க இது உதவும்.
டைம் இதழ்
கடந்த மே 2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்றதில் இருந்து மோடி செய்து வரும் ராஜந்திர நடவடிக்கையின் மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம் இதுதான்.
நேஷனல் பப்ளிக் ரேடியோ
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுதான் முதல் முறையாகும். இருநாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் அடையாளமாக இது இருக்க முடியும்
லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்
சர்ச்சைக்குரிய உறவில் மோடி புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ்;
இந்திய பிரதமர் ஒரு கொள்கையில் இருந்து மற்றொரு கொள்கைக்கு உடனடியாக மாறிக்கொண்டு இருக்கிறார். மோடியின் வெளியுறவுக்கொள்கையில் நடந்த ஒரு நடனம் என விமர்சனம் செய்துள்ளது.
அமெரிக்காவின் அனைத்து செய்தி ஊடகங்களும், டுவிட்டர் , மின்னஞ்சல் போன்ற தளங்கள் மூலமாக மோடியின் பாகிஸ்தான் பயணம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்கி வந்தன.