நம்நாடு

தன்னிறைவு பெற்ற நாடு -நம்நாடு
ஆம் தனிப்பட்ட மனிதனின் பசியினை
நீக்க முடியாத தன்னிறைவு பெற்ற நாடு !

வளம் பெற்ற நாடு -நம்நாடு
ஆம் வல்லவர்கள் மட்டும் வளமும்
வறியவர்கள் வறுமை பெற்றும் வாடும் நாடு !

வேளாண்புரட்சி செய்த நாடு -நம்நாடு
ஆம் இயற்கையில் செயற்கையை புகுத்தி
வேளாண்மையை வெறும் வேடிக்கை ஆக்கிய நாடு !

விடுதலை பெற்ற நாடு -நம்நாடு
ஆம் அந்நிய சக்தியிடம் விடுதலை
பெற்று அரசியல் சக்தியிடம் தோற்றுப்போன நாடு !

வளர்ந்து வரும் நாடு - நம்நாடு
ஆம் தன்னுடைய வளங்களை எல்லாம்
மற்றவர்க்கு வாரி வழங்கிய பெருமைமிகு நாடு !

இருப்பினும் ஒருமைப்பாடு பெற்றது -நம்நாடு
சென்னை வெள்ளத்தில் தனது மனிதாபிமானத்தின்
எல்லையை மற்றவர்க்கு வெளிகாட்டிய பெருமைமிகு நாடு !

இயற்கையின் இந்த சோதனையில் -வெற்றி
கண்ட நாம் இன்னும் மனிதர்கள்தான்
என்று உரக்க சொல்வேன் பெருமைமிகு முகத்துடன் !

எழுதியவர் : விக்னேஷ் நதியா (10-Jan-16, 9:39 pm)
பார்வை : 238

மேலே