எழுத்தெனும் லகான்

மறதி என்பது
மக்களின் மாசற்ற உணர்வு.

நினைவு படுத்த தூண்டுவது
எழுத்தாளர்களின் கடமை.
எழுத்து அவர்களின் தொழில்,
எடுத்து இயம்புகையில் எழில்.

கவிதையில் ஒரு கதை,
கதையில் ஒரு சம்பவம்,
படித்துணர்ந்ததும் ஒரு பாடம்,
பாடத்தின் மூலம் பழைய வேதம்.

வாழ்க்கை பயணம் அனுதினம்
கவிதை கதை என்று கலப்போம்,
கட்டுரைத்தகவல்களில் மிளிர்வோம்;
நகைச்சுவையில் மனம் தித்திக்கும் வகையில்
நயம்பட நேரம் பயனுற நாமும்
கிளைப்போம், திளைப்போம்!

எழுதியவர் : செல்வமணி (10-Jan-16, 11:25 pm)
பார்வை : 99

மேலே