இதயமே , இதயமே
என்ன தான் நீ தொலைவிருந்தாலும்
இதயம் இப்படியா கொல்லுவது
பேசுகையில் ஒருவிதமாய்
பேசாமலிருக்கையில்
வார்த்தைகளைப்
பிடிவாதமாய்
அணிந்து கொண்டு
நினைப்பிருக்கையில் ஒருவிதமாய்
நினையாதிருக்கையில்
உன்னை வேண்டுமென்றே
புனைந்து கொண்டு
கிளையில்லாத பறவையாய்
எப்போதும் உன்னைச் சுற்றி
சிறகடித்துக் கொண்டிருக்கும் இதயத்திற்கு
எப்படிச் சொல்வேன்
அதன் உள்ளில் தான்
நீயிருக்கிறாய் என்று