வாராய் தமிழே

முந்தாத வேலிரண்டு முகத்திலே விழிஎன்று
சிந்தாத மைதீட்டி சிங்கார பொட்டுமிட்டு
வந்தாரை வாழ்விக்கும் வளமான இனம்தேடி
வந்தாடும் மலரேஉன் வழிபார்த்து பாடுகிறேன்!!

சிந்தையில் நெடியவர் கருத்தினில் கவியூற
முந்திவரும் சொல்லாட காவியங்கள் கரையேற
அந்தியில் அரும்புகிற பொன்மலர் கூட்டத்தில்
சந்திரனும் தலைகாட்டி தண்ணொளி வீசிவர

முந்தைய நாட்களில் சுட்டெரித்த சூரியனை
சிந்திக்க தவறுமோ இச்சிறு ஞாலம்!!
நிந்திக்க தெரிந்தால் நீதிசொல்ல போதுமோ
நிந்தனை யாவும் நியாயங்கள் ஆகுமோ!!!

சீறிவரும் காளைகள் முன்னிற்க திறனற்றோர்
ஏறிட்டும் காணவும் பயந்தவர் தடுத்ததை
மீறிவரும் வீரத்தை யார்தடுக்க கூடும்;குருதியில்
ஊறிவரும் உணர்வு ஊருக்கு விளையாட்டோjQuery1710035220263583649825_1653567358446

மாற்றானின் கைகட்கு கருவிகள் ஆயுதம்
சீற்றம் கொண்டு எம்மவர் எழுந்தால்
மற்றேதும் தேவையில்லை கையிரண்டும் ஆயுதம்
கற்றவை யாவும் பண்பையே கட்டியதால்

கட்டுண்ட கூட்டம் கல்லாக நின்றிருக்க
விடுபட்ட ஈனர்கள் மென்மேலும் சுமைகூட்ட
கட்டவிழ்க்க வாராயோ யுத்தமுகம் பாராயோ

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (15-Jan-16, 12:20 pm)
பார்வை : 389

மேலே