நீங்காத நினைவுகள் நீயாக
உள்ளம் கனிந்த காதல் கண்டோம்
உறவும் கனிந்து வாழ்த்த கண்டோம்
காதல் உறவில் கனிந்த கனியை
இல்லற உறவில் பகிர்ந்து கொண்டோம்..
நினைவில் எண்ணிய இல்லம் கண்டோம்
இல்லம் முழுதும் இன்பம் கண்டோம்
உள்ளும் புறமும் உண்மை எனவே
நீயும் நானும் வாக்குகள் கொண்டோம்....
மாதம் பத்து நான் சுமக்க
மலைபோல் சீலை நீ குவிக்க
பாதம் பதிக்க மலர் விரிக்க
பாதை முழுக்க தோள் கொடுக்க..
பூப்போல் பிள்ளை அவள் உறங்க
பூக்கள் கொண்டு பாய் விரிக்க
நந்தவனமென நடை பயில
சொந்த வனமதை நாம் படைக்க..
நாளும் பொழுதும் கனவுகள் கண்டோம்
நாட்கள் யாவும் இனித்திட கண்டோம்
பாலும் தேனும் பழகிட நினைத்தோம்
பாயை விரித்து கனவினில் கழித்தோம்...
மலர்போல் வாழ்க்கை கனவினில் கண்டோம்
மலர்கள் யாவும் வாடிட கண்டோம்
கருகிய மலரென இருதயம் கொண்டோம்
அதனினும் வாசம் உண்டென கண்டோம்...
பிரிவின் துயரை இணைந்தே சுமக்க
கடக்கும் நொடிகள் கசந்திட கண்டோம்...