பேரரசி

பேரரசி
- - - - - - -
என் அன்பு
உண்மையானது
சிதறி விழுந்த
எதிரியின்
செல் வீச்சில்
கால் இழந்த
உன்னை
என் பேச்சால்
ஊனமுற்றவன் என
சொல் வீச்சு வீசி தாக்குதல்
செய்ய நான் என்ன
உள்ளே ஊனமுற்றவளா..?

என் காதல்
ஆழமானது
தோண்டத் தோண்ட
ஊறிக் கொள்ளும்
ஆழ்கிணற்று நன்னீர் போல
உன் தாகம்
தீர்ப்பேன் !
கலங்காதே
நாம் இருவர் அல்ல
ஒருவர் !

கல்லான் ஆனாலும்
கணவன்
புல்லான் ஆனாலும்
புருசன்
என்பது பழமொழி
கால் இல்லான் ஆனாலும்
கணவன்
புகழ் இல்லான் ஆனாலும்
புருசன்
என் புது மொழி
இவள் நல்லினியாள்
அன்பு நாட்டின் பேரரசி ....!

* குறிப்பு
(கல்லான் _ கல்வி இல்லாதவன்
புல்லான் _பொருள் இல்லாதவன்)

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (20-Jan-16, 12:47 am)
பார்வை : 184

மேலே