பற்றி எரிந்த பனித்துளி

காதலர்களின் மனம் கவர்ந்த
மார்கழி மாதத்தில் .....
என் கண்மணியும் அவளே
என் கனிமொழியும் அவளே
என் கன்னுக்குட்டியும் அவளே...
சகலகலா வல்லவனாகிய பகலவனும்
பாதி உறக்கதிலிர்க்க ....
சொர்க்கம் போல் தெரிந்த
பனிமண்டலத்தில்
மேற்கூறிய அவளுடன்
நானும் ஊடுருவினேன்.....
அவள் இதழ்த்தேன் சுவைக்கும்
வண்ணத்துபூச்சி ஆனேனோ தெரியவில்லை...
சிறகடித்தது என் மனம்....
அவள் பனியை புகைத்து கொண்டிருக்க
என் மீதுள்ள பனித்துளிகள் பற்றி எரிந்தது
அவளின் சிறு சிறு உரசல்களால்...

எழுதியவர் : மா.யுவராஜ் (27-Jan-16, 5:16 pm)
சேர்த்தது : யுவராஜ்மா
பார்வை : 98

மேலே