அதிகாலைப் பயணம்

மேகப் பஞ்சுகள் உதிருதோ
எனத் தோன்றும்!
வானை மூடிய; பணிப்போர்வைகள்
தெரு விளக்கு கதிரவனில்.,
செய்யும் மாயைகள்...
பற்களை மோதச்செய்து
உடலினை ஆடச் செய்யும் குளிரி்ல்.....
காக்கையின் கரைச்சலில்
சேவலின் கூவலில்...
அருமை வண்டியில் ஒரு
அதிகாலைப் பயணம்....
கதிரவன் சுவாலைகள்
பூமியை அடையவில்லை..,
சந்திரன் அழகு சற்றும்
தளரவில்லை......
சிறு எறும்பை போல் சுறுசறுப்பாய்.....
கண் சிமிட்டும் வேகத்தில்
பத்திரிக்கை பிரித் தடுக்கும
கைகள்...
சேவலின் அரைகூவலில்
அடுப்பில் பாலை ஏற்றும்
அண்ணாச்சி....
பால் வண்டி ஓசையில்
தூக்கம் கலைத்த ஆட்டோ
அண்ணன்....
பணியினை கிழித்து வரும்
வண்டியினை நேரத்தில்
பத்திரமாய் சேர்த்த களைப்பில் ஓட்டுனர்.....
காற்றை கிழித்து வரும்
தூரத்து ரயிலின் ஓசை....
கண்களில் இரத்தம் கோர்க்க
அரைத் தூக்கத்தில்
அமர்ந்திருக்கும் காவளாளி.....
பல உடுப்பு அணிந்திருந்தும்
பற்கள் உராயும் குளிரில்
தலையில் துண்டை மட்டும்
கட்டிக் கொண்டு காய்கறி
பாரம் ஏற்றும் தொழிலாளி....
நடு நிசியில் அமைக்கப்பட்ட
நாகரிக சாலைகள்.,
தூய்மையை பேணிகாக்க
தூக்கம் தொலைக்கும்
துப்புரவுத் தொழிலாளி.,
உறக்கம் கலைத்து விழித்தெழும்
என் நாடு
தடைபடாமல் செயல்பட....
நாடு உறங்கும் வேலையில்
விழித்து உழைக்கும் விழிகள் பல.......
அருமையான பதிவுகளோடு,,
நம் நிம்மதியான உறக்கத்திற்கு உலகின் உச்சியில் காவல் நிற்கும் நம் தேசத்து வீரர்களை எண்ணியவாரே....
வீடு வந்து மீண்டும் புதையுண்டேன் என் பஞ்சு போர்வையினுள்.......
என்னுடைய நாளைய ஓட்டத்துக்கு தயாராக....

எழுதியவர் : பரத் குமார் (1-Feb-16, 10:44 am)
சேர்த்தது : s.Bharath kumar
பார்வை : 97

மேலே