நிலவின் பிரகாசம்

அமுதத்தில் (தமிழ்)
பாட்டமைக்கும்
சிறந்த புலவர்கள்
பெருமை பாராட்டிகொண்டனர்
தங்களின் புகழ்
கவிகளை கேட்பதற்காகவே தான்
நிலவானது ஒளிருவதாக..
அதையறிந்த நிலவு
குழப்பத்தில் மணல் புழுதியில்
அழுக்கேறி ,
கந்தல் ஆடையுடன்
பசி ஏக்கத்தால்
விழி பிதுங்கிய நிலையில்
"அம்மா நெலா வந்துருச்சு"
என்று சிரித்துக்கொண்டே
பழைய கஞ்சியை
உண்ணும் சிறுவனை
சுட்டி காட்டி
இவன் போன்றவர்களின்
சிறு புன்னகையை காணவே
இவ்வாறு பிரகாசிக்கிறேன்
என்றது அமைதியாக..!!!

எழுதியவர் : பூங்குழலி (2-Feb-16, 4:54 pm)
Tanglish : nilavin pirakaasam
பார்வை : 139

மேலே