திருமண நாள் வாழ்த்து மடல்

இறையருளோடு .....

ஆன்றோரும் சான்றோரும் வாழ்த்துரைக்க .... ..

மங்கள நாதங்கள் முழங்க ....

அக்கினி சாட்சியாய் ....

என் மனங்கவர்ந்த .....

இனியவளின் மலர்க்கரம் பற்றி

மணவாழ்வில் இணைந்திட்டு

இன்றோடு ஆகிறது எட்டாண்டு ......

ஆம் யாருக்கும் கிட்டாத நல்வாழ்வு

கிடைத்து இன்றோடு ஆகிறது எட்டாண்டு ......

இறைவா ...

இப்படி ஒரு நல்வாழ்வு தந்தமைக்கு ....

தங்களின் பொற்பதம் பணிகின்றேன் ....


பிறைநிலவாய் வந்து இன்று முழு நிலவாய்

என்னில் மலர்ந்திருக்கும் என்னவளே ...

என் "வாழ்வாய்" நீ வந்தமைக்கு

உனக்கும் கூட நன்றிகள்

கோடியடி பொன் நிலவே ...

ஆம் மனைவி அமைவதெல்லாம் .....

இறைவன் கொடுத்த "வரம்" ...என

என்னை உணர வைத்த உன்னதமானவளே ...

உன் வரவால் வசந்தங்கள் சேர்ந்ததடி வாழ்வில் ...

ஊடல் இல்ல காதல் உண்டோ ...? ஆம்

ஊடல் உண்டு நம்மிலும் என்ற போதும் ......

உள்ளம் கொண்ட காதல் அது இல்லை என்றாகுமோ ?

என்னவளே ....

உன் மனம் நோக ஓர் நாளும் நான் நடவேன் ...

ஒருவேளை உன் மனம் நோக நடந்திருந்தால்

மன்னித்து விடு எந்தன் மல்லிகையே ... ஆம்

உன்னில் என்றென்றும் புன்னகை மட்டுமே

மலர்ந்திருக்க ஏங்குகின்றேன் .....

இப்பிறவியல்ல .... எப்பிறவியாயினும்

நீ எந்தன் " வாழ்வாக " வரவேண்டும் என

அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ....

ஆம் இது போன்று திருமண நாள் ....

இன்னும் கோடி வேண்டும் என இறைவனையே வேண்டுகின்றேன் ...


வற்றாத வளம் ..... குறைவில்லா நலம் ......

வழுவாத பண்பும் .... என இன்னும் பதினாறும் பெற்று

பெருவாழ்வு வாழ்ந்திட

வரம் ஒன்றும் தந்து விடு என் இறைவா .

என உளமார வேண்டுகின்றேன் .... நானும் இன்று ....


கடல் கடந்து வந்த போதும் காதல் இன்னும் உள்ளதடி ....

காத்திருப்பாய் கண்மணியே ....

நம் கைகள் சேரும் .... நல்ல காலம் வரும் வெகுவிரைவில் .....

இனிய திருமண நாள் வாழ்த்துகளுடன் ....

உன் அன்பு கணவன் .....

எழுதியவர் : கலைச்சரண் (7-Feb-16, 7:23 pm)
பார்வை : 19923

மேலே