தோன்றுமா

கோடைப் பொழுதுகளில்
குளிர்ந்த காற்று வீசுவதை
குடைவிரித்து நிறுத்த
தோன்றுமா..??

அதிகாலை வேளைகளில்
மொட்டு அவிழும்
பூக்களைக் கண்டும்
கண்களை மூடிக் கொள்ள
தோன்றுமா..??

வறட்சியான நேரங்களில்
சொந்தம் தந்த
சொம்புத் தண்ணீரை
தரையில் ஊற்ற
தோன்றுமா..??

பிறகு ஏன்
எனக்கு மட்டும்
தோன்ற வேண்டும்..??

என்னை மறந்துவிடு
என்று நீ கூறிய
வார்த்தைகளின்
நினைவுகள்..!!

என்றும் காதலுடன்..

செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (11-Feb-16, 8:01 pm)
பார்வை : 84

மேலே