சில கவித் துளிகள்-2

யார் மீது கோபம்
மூக்கின் நுனியில் மின்னுகிறது
- பனித்துளி

கொடுத்தால் தட்சணை
இல்லாவிட்டால் பிரட்சனை
- வரதட்சனை

நான் பிரிந்திருக்கிறேன்
நாம் இணைந்திருக்கிறோம்
- உதடுகள்

ஓய்வும் இல்லை உறக்கமும் இல்லை
விடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது
- நதி

இன்பம் என்று துன்பத்தை
விலை கொடுத்து வாங்குகின்றனர்
- மது கடையில்

நிறங்கள் மாறுகின்றன
நிழல்களும் மாறுகின்றன
- அப்படியே கிடக்கின்றது சாலைகள்

காதலும் மோதலும்
அடித்துக் கொண்டும் அரவணைத்துக் கொண்டும்
- கடல் அலைகள்

இளமை துள்ளுகிறது
ஆபத்தை அழைக்கிறது
- படிக்கட்டிலே ஊசலாடுகிறது உயிர்

வருடம் முழுவதும் உழைத்தாலும்
ஊதியமும் ஓய்வும் இல்லை
- கடிகாரம்

மகிழ்ச்சியில் மறக்கின்றனர்
துக்கத்தில் ஏசுகின்றனர்
- இரண்டிற்கும் சாட்சியாய் இறைவன்

எழுதியவர் : நித்யஸ்ரீ (26-Feb-16, 12:43 pm)
பார்வை : 151

மேலே