முயல் தேசக்காரிக்கு மீண்டும் ஒரு கவிதை
அழுதிடத் தோன்றுகிறது
உன் இலைமறை
இணுங்கல்கள்....
சருகாகி விழுந்த பிறகும்
உன் இலை தேச
வழிகள் ஞாபகம்...
பனி செய்யும் சூட்டுக்குள்
உன் மறதிகள்
என் நடுக்கம்...
புயல் கடந்த புத்திக்குள்
பூச்சிக் கூடாய் உன்
முணு முணுப்பு...
நிலை பிறழ்ந்த நினைவுக்குள்
இப்போதெல்லாம் சிறகல்லநான்
சிணுங்கல்.....
சலசலத்து சங்கீதமாகும்
ஓடைக்குள் உன்னமைதி
பேரழுகை...
புதிர் அவிழ்த்து போதியாய்
நிற்கிறாய்- புத்தனை
முத்தமிட்ட நீ...
கலைந்து, கண்டு, திரும்பி
மூடும் கண்கள் உன்னையே
சிமிட்டுகின்றன...
சரி... போதும் விடு
என்றபோதும்
பத்தாது என்கிறது மீண்டும்
உன் பிரிவு....
கவிஜி