மனிதன் மனிதனாக

நாய் ஒன்று குறைக்கிறது
தெரு முனையிலே
இடைவிடாமல் எதற்கோ
தெரியவில்லை.

நாய் தானே என்று நடக்கிறோம்
திரும்பிப் பாராமல்
அதுவும் ஓர் உயிர் என்று
நினையாமல்.


அந்த மெத்தனம் ஏனோ
புரியவில்லை
அசட்டையாக இருப்பது
நியாயமே இல்லை .


நாய் என்று ஒதுக்குவது
சரியில்லை
உயிர் என்று மதிப்பது
நியமம் கூட


இதற்கு காரணங்கள் கண்டு
பிடிக்க முடியவில்லை
ஏனோ
மனிதன் மனிதனாக
நிறைவு பெறவில்லை

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (13-Mar-16, 9:10 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 325

மேலே