உன் வாசனை

வழமை போல் இன்றும்
நான் பூக்களை முகர்ந்திருந்தேன்
என்னவொரு ஆச்சரியம்!
சில பூக்களில்
உன் வாசனையை நுகர்ந்தேன்
ஆராய்ந்தேன்
விடையறிந்தேன்
அவை
உன்னை முகர்ந்த பூக்கள் என்று.

எழுதியவர் : முகம்மது பர்ஸான் (15-Mar-16, 8:53 pm)
Tanglish : un vasanai
பார்வை : 226

மேலே