நிலா

தன்னந்தனியாக இருக்கின்றோம் என்று இவள் ஒருநாளும் எண்ணவில்லை.
புன்னகைசிந்தியே பூவுலகை பார்த்தபடி இருக்கின்ற காரணமும் இதுவரை தெரியவில்லை.
அச்சப்படாத அழகின் உச்சமாய் வானவீதியில் வலம் வரும் அழகே,
மயக்கும் மாலையில் தவிக்கும் இதயத்தின் வலிகளை தணிக்கும் நிவாரண உறவே.
உன் மந்திர சிரிப்பில் மாநிடமே மயங்க..
உன் அழகை பருகியே இருவிழியும் உறங்க..
கவிஞர்கள் பலர் உன்னை காதலித்து வருகின்றார்.உன்னை
எண்ணியே கவிதைகோடி தருகின்றார்.
யாருக்கும் கிட்டாமல் எட்டாமல் இருக்கிறாய்.
உன் உள்ளத்து காதலனை உலகிற்கு மறைக்கின்றாய்...

எழுதியவர் : கு.தமயந்தி (18-Mar-16, 3:10 pm)
Tanglish : iyarkai
பார்வை : 160

மேலே