மழையில் ஆடும் உனது விழிகள்

மழையில் ஆடும்
உன் விழிகள் ரெண்டும்
கனவு தேசமே!

ஈர துளிகள்,
உன் இதழை துடைத்து
மரணம் அடையுமே!

மடியில் படுத்து
உறங்கும் போது,
நிழல் தர,
உன்,
வெண்குடைகள் போதுமே!

பனியில் மோதும்,
உந்தன் கூந்தல்
எனக்கு, தேவ தரிசனமே!

பருவ நிலா,
உந்தன் நடையை கண்டால்
மயில் நாணம் கொள்ளுமே!

கண்கள் ரெண்டும்,
மோதிக்கொண்டால்
காதல் ஆகுமே!

கைகள் ரெண்டும்,
பிண்ணிக்கொண்டால்
ஆசை தீருமே!

மௌனம் கொண்டு,
மையல் கொண்டால்,
மோகம் தீருமா?

கழுத்தின் கீழே,
பார்வை போனால்,
உன் விழி,
கோவம் கொள்ளுமா?

பார்த்து கொண்டே
இருந்துவிட்டால்,
கடிகாரம்,
மரணம் அடையுமா?

அணைத்து கொஞ்சம்
தூங்கினாலே,
என் அன்பு தெரியுமே!

பஞ்சணையில்,
தழுவும் போது
இடைவெளி இடிக்குமா?

இப்படியே இருந்துவிட்டால்,
இந்த இம்சை
தீருமா?

எழுதியவர் : Sherish பிரபு (18-Mar-16, 6:18 pm)
பார்வை : 134

மேலே